மலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில்

மலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில் வரலாறு
 

தமிழ்நாட்டில் எப்படி முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளதோ அதுபோல மலேசியாவில் பத்துமலை, கல்லுமலை, தண்ணீர்மலை முருகன் கோவில்கள் சிறப்புற்று விளங்குகின்றன. பத்துமலை முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மிக உயர்ந்த சிலையுடன் உள்ள அந்த முருகனை பற்றி தெரியாதோர் இருக்க முடியாது.

ஆனால் மலேசியாவில் உள்ள தண்ணீர்மலை முருகன் என்ற இந்த முருகனை பற்றி அறிந்தவர் குறைவு. மலேசியாவில் 13 மாநிலங்களில் ஒரு மாநிலம் பினாங்கு தீவு. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன் இந்த நகரத்தில்தான் இந்த முருகன் கோவில் உள்ளது. கிபி 1810ல் இங்கு நிதி நிறுவனங்கள் நடத்தி வந்த நகரத்தார்கள் தண்ணீர்மலை அடிவாரத்தில் இருந்த வேலை எடுத்து சென்று மலைமேல் கோவில் எழுப்பி வழிபாடு செய்தனர்.

அந்த மாநிலத்தில் உள்ள ஆறுமுகம் பிள்ளை என்ற செல்வந்தர் இந்த கோவிலுக்கு அதிகம் திருப்பணிகள் செய்து கோவில் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

1991ம் ஆண்டிற்கு பிறகே இக்கோவில் வெளியுலகிற்கு அதிகம் தெரிய வந்தது.  இப்பகுதியில் வசித்து வந்த குவனராஜூ, டத்தோ ராஜசிங்கம் மற்றும் இந்து அறப்பணி வாரியமும் சேர்ந்து புதிய கோவில் எழுப்ப முயற்சி எழுப்பபட்டு  மலையின் இடையில் இருந்த ஆலயம் மலையுச்சியில் கட்டப்பட்டு மிகப்பெரிய ராஜகோபுரத்துடன் 512 படிகள் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு திருச்செந்தூர் முருகன் போல மிக அழகாக முருகன் காட்சி தருகிறார்.

பத்துமலை முருகன் போலவே இங்கும் சீனர்கள் அதிகம் வந்து வழிபடுகின்றனர். மலேசியா சென்றால் கண்டிப்பாக இந்த கோவில் பார்க்க வேண்டிய கோவில் ஆகும்.

From around the web