இன்று மஹா சிவராத்திரி- அனைவரும் தவறாமல் கோவில் செல்லுங்கள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாம் செய்ய வேண்டிய விசயங்கள்
 

இப்போதெல்லாம் மன அமைதியை தேடி நிறைய கோவில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி செல்பவர்களில் பலர் ஏதாவது பிரச்சினைக்காகவும், ஜோதிடர் சொல்லும் பரிகாரத்துக்காகவும் கோவிலுக்கு வருவதை பார்த்து இருப்பீர்கள். பலர் கோவிலுக்கு செல்வதே கிடையாது பிரச்சினை என்று வரும்போது மட்டும் ஜோதிடரை பார்ப்பது கோவிலுக்கு போவது பரிகாரம் செய்வது என இருப்பார்கள். மற்ற நாட்களில் பணம் பணம் பணம் என மணி மைண்ட் என சொல்லக்கூடிய அந்த விசயத்திலேயே இருப்பார்கள், வேலை வேலை என ஓடிக்கொண்டே இருப்பார்கள் அவர்கள் எல்லாம் வருடத்தின் ஒரு நாள் ஆன சிவராத்திரி அன்றாவது  கோவில் சென்று வழிபட்டு ஈசனை வணங்கி, தேவாரம் திருவாசகம் முதலியவற்றை பாடி ஈசனை வணங்க வேண்டும்

நம்மை படைத்தது உலகை ஆளும் பரம்பொருள் ஆன ஈசன் அந்த ஈசனை மறந்துவிடக்கூடாது. நம்மை இந்த பூமியில் பிறப்பெடுக்க வைத்து நமக்கு இன்ப துன்பங்களை தந்து நமக்கு நல்வரங்கள் தருபவன் ஈசன்.

நம்மை படைத்த ஈசனை, இந்த கலியுக கம்ப்யூட்டர் வாழ்க்கையில் அனுதினமும் ஆராதிக்காவிட்டாலும் சிவராத்திரி என்று வரும் இந்த ஒருதினமாவது ஆராதனை செய்தால் சிறப்பு. இது போக குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானது அந்தகுல தெய்வ வழிபாட்டையும் இன்று மேற்கொள்வது சிறப்பு.

From around the web