கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!

கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. பூஜைக்கு முன்வரை சாதா சாதமா இருந்த உணவுப்பொருள் பிரசாதமாய் மாறிவிடுகிறது.அதாவது அந்தப்பொருள் புனிதப்பொருளாகிவிடுகிறது. எத்தகைய குற்றங்கள் செய்திருந்தாலும், தன்னை மனப்பூர்வமாக இறைவனுக்கு ஒப்படைத்து விட்டால் புனிதனாகி விடலாம் என்பதையே பிரசாதம் குறிக்கிறது. தங்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக படைக்கப்படும் இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், அவர்களின் பாவம் நம்மை வந்து சேருமென ஒருசிலர் சொல்வர். ஆனால், அது உண்மையல்ல!
 
கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!

கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. பூஜைக்கு முன்வரை சாதா சாதமா இருந்த உணவுப்பொருள் பிரசாதமாய் மாறிவிடுகிறது.அதாவது அந்தப்பொருள் புனிதப்பொருளாகிவிடுகிறது. எத்தகைய குற்றங்கள் செய்திருந்தாலும், தன்னை மனப்பூர்வமாக இறைவனுக்கு ஒப்படைத்து விட்டால் புனிதனாகி விடலாம் என்பதையே பிரசாதம் குறிக்கிறது.

கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!

தங்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக படைக்கப்படும் இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், அவர்களின் பாவம் நம்மை வந்து சேருமென ஒருசிலர் சொல்வர். ஆனால், அது உண்மையல்ல! காரணம், வீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரும் உணவுப்பொருள் அப்படியே அனைவருக்கும் தரப்படுவதில்லை. இறைவனுக்கு அபிஷேகம் தொடங்கி, முடியும்வரை 16 விதமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு முடிவில் கற்பூர ஆரத்தி(நெய் தீபம்) காட்டப்படும். அப்படி காட்டப்படும் கற்பூர ஆரத்தி நம் பாவங்களை மட்டுமல்ல! உணவில் இருக்கும் கெட்ட சக்திகளையும்கூட நீக்கிவிடும்.

இந்த பிரசாதத்தினை வாங்குவதிலும் முறைகளை பின்பற்ற வேண்டும். வரிசையில் நின்று சத்தமில்லாமல் நகர்ந்து பிரசாதத்தினை கைநீட்டி வாங்கவேண்டும். வலது உள்ளங்கையால் உணவினை வாங்க வேண்டும். வலது உள்ளங்கையால் பிரசாதத்தினை வாங்கி, இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக உண்ணவேண்டுமே தவிர, வலது உள்ளங்கையில் வைத்தே அப்படியே கடித்து சாப்பிடக்கூடாது. மிருகங்கள்தான் அப்படி சாப்பிடும். அதுமட்டுமல்லாமல் நமது உள்ளங்கையில் தெய்வங்கள் குடியிருப்பதாய் சொல்வார்கள். அவர்களை எச்சில் படுத்தக்கூடாது.

From around the web