ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!

சிலருக்கு அடிக்கடி ஜீரணக்கோளாறு உண்டாகும். கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் எதாவது பக்கவிளைவுகள் உண்டாகும். அதனால், இஞ்சி, சுக்கு, பூண்டு மாதிரியான இயற்கையிலேயே விளையும் பொருட்களை கொண்டு வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டால் ஜீரணக்கோளாறும் நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும். தேவையான பொருட்கள் எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகு – 1/4 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் – 6 கறிவேப்பிலைஇஞ்சி – 2 பெரிய துண்டுவெங்காயம் – 2தக்காளி – 2புளி
 

சிலருக்கு அடிக்கடி ஜீரணக்கோளாறு உண்டாகும். கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் எதாவது பக்கவிளைவுகள் உண்டாகும். அதனால், இஞ்சி, சுக்கு, பூண்டு மாதிரியான இயற்கையிலேயே விளையும் பொருட்களை கொண்டு வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டால் ஜீரணக்கோளாறும் நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 6
கறிவேப்பிலை
இஞ்சி – 2 பெரிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 2
புளி – ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்

ஜீரண கோளாறா?! அப்ப, இஞ்சி சட்னி சாப்பிடுங்க!!

செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து  வைத்துக் கொள்ளவும். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தயிர்சாதத்துக்கு மேலும் சுவையா இருக்கும். இந்த சட்னியை அடிக்கடி சாப்பிட்டால் ஜீரணக்கோளாறு எட்டி பார்க்காது.

From around the web