ஈச்சநாரி விநாயகர் வரலாறு

ஈச்சநாரி விநாயகப்பெருமானின் சிறப்புகள்
 
ஈச்சநாரி விநாயகர் கோவில்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உள்ளது. இப்படி புகழ்பெற்ற பல கோவில்கள் இந்தியாவில் உள்ளது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் ஈச்சநாரி விநாயகர் கோவில் உள்ளது.

ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற ஒரு கோயிலாக இருக்கிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோயிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாக இருக்கிறது.
 

எத்தகைய காரிய தடைகளையும் இந்த விநாயகர் போக்கி இன்பமளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தங்கள் காரியங்களின் பல தடைகளை இக்கோவில் வந்து சென்ற பின் அத்தடைகள் சுக்கு நூறாக உடைந்து போனதாகவும் பல பக்தர்கள் நம்பிக்கையோடு இந்த விநாயகரை பற்றி கூறுகின்றனர்.

ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல கோவை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

ஒரு காலத்தில் கோவையின் புகழ்பெற்ற கோவிலான  பேரூர் பட்டீஸ்வரர் சிவ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு 5 ஆதி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை  வண்டியில் கட்டி சென்று கொண்டிருந்த போது, தற்போது இக்கோயில் இருக்கும் இடத்திலேயே வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் விக்ரகம் இங்கேயே அமர்ந்துவிட்டதாம், மக்கள் அனைவரும் எவ்வளவோ முயன்றும் விநாயகர் சிலையை இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் சோர்ந்துவிட்டனர். காஞ்சி பெரியவரின் அருள்வாக்கு படி இந்த விநாயகர் விக்ரகம் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

From around the web