கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியில், கருடன் அவதரித்ததாகச் புராணம் சொல்கின்றது. கருடன் அவதரித்த அந்த நாளைதான் கருட பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். ஒரு விவசாய குடும்பத்தில் ஏழு சகோதரர்கள். அவர்களுக்கு ஒரேயொரு தங்கை. விவசாயம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள், வயலுக்கு சென்ற தன் ஏழு அண்ணன்களுக்கும் மதிய உணவினை எடுத்துக்கொண்டு தங்கை சென்றாள். அப்போது வானத்தில், கருடன் ஒன்று நாகத்தை கவ்விக்கொண்டு பறந்தது. கருடன் வாயில்
 
கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியில், கருடன் அவதரித்ததாகச் புராணம் சொல்கின்றது. கருடன் அவதரித்த அந்த நாளைதான் கருட பஞ்சமி என்று கொண்டாடுகிறோம்.

ஒரு விவசாய குடும்பத்தில் ஏழு சகோதரர்கள். அவர்களுக்கு ஒரேயொரு தங்கை. விவசாயம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள், வயலுக்கு சென்ற தன் ஏழு அண்ணன்களுக்கும் மதிய உணவினை எடுத்துக்கொண்டு தங்கை சென்றாள். அப்போது வானத்தில், கருடன் ஒன்று நாகத்தை கவ்விக்கொண்டு பறந்தது. கருடன் வாயில் சிக்கிய நாகம் வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. நாகம் கக்கிய விஷமானது தங்கை தலைமீது வைத்து எடுத்துக்கொண்டு சென்ற உணவில் விழுந்தது.

உணவில் விசம் கலந்ததை அறியாத தங்கை, அண்ணன்களுக்கு உணவை பரிமாறினாள். தங்கையின் கைப்பக்குவத்தைப் பாராட்டியபடி அனைவரும் சாப்பிட்டார்கள். சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து போனார்கள்.  அண்ணன்கள் இறந்ததைக்கண்ட தங்கை கதறி துடித்தாள் ‘நான் என்ன தப்பு செய்தேன். இந்த உணவைச் சாப்பிட்டு ஏன் இவர்கள் எல்லோரும் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள்’ என்று கலங்கித் தவித்தாள். ‘என் சிவனே… நீதான் என் அண்ணன்களைக் காப்பாத்தணும்’ என்று வேண்டினாள்.

கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!


அவளின் பக்தியில் நெகிழ்ந்த சிவனார், உமையவள் சகிதமாக அவளுக்கு திருக்காட்சி தந்தார். விவரம் மொத்தமும் சொன்னாள். ‘இன்று கருட பஞ்சமி. இந்தநாளில், கருடனை வணங்கவேண்டும். அப்படி வணங்காமல் வந்துவிட்டாய். கருட பூஜையை செய்ய்யவேண்டும். நீ செய்யவில்லை. இப்போதே, கருடனை நினைத்து சிரத்தையாகப் பூஜை செய். கங்கணம் செய்யப்பட்ட கயிற்றை எடுத்துக்கொண்டு, அதில் ஏழு முடிச்சுக்களை இடு. அருகில் பாம்புப்புற்று இருக்கும். அந்தப் புற்று மண்ணையும் அட்சதையையும் சேர்த்துக்கொள். மனதார கருடனை வணங்கு. அவர்கள் உயிருடன் எழுந்திருப்பார்கள்’ என அருளிச் சென்றனர்.  அதன்படியே பூஜை செய்தாள் அந்தப் பெண். இறந்தவர்களுக்கு உயிர் வந்தது. எழுந்து நின்றார்கள். இன்றைக்கும் கூட ஆயுள் நீட்டிக்கும் விரதமாக, ஆரோக்கியம் தரும் விரதமாக, நலம் தரும் விரதமாக, வளம் கொழிக்கச் செய்யும் விரதமாக, சுபிட்சம் தரும் விரதமாக, ஐஸ்வர்யம் அருளும் விரதமாக, ஞானம் தரும் விரதமாக, யோகம் தரும் விரதமாக கருட பஞ்சமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

From around the web