திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
 
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் தினம் தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகின்றனர்.நடைபாதையில் நடந்து பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 100 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டது.

சில மாதங்களாக கொரோனா பரவல் சீரான முறையில் இருந்த நிலையில் தற்போது அதிக கொரோனா தொற்று காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாததாலும் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளனர்.

கட்டண தரிசனத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கும் மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

From around the web