நவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்

நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர். துர்க்கைக்கு முதல் நாள் அன்று படைக்கப்படும் உணவுகள்: சுண்டலைப் பொறுத்தவரை தேங்காய் கலந்தும் தேங்காய் இல்லாமலும் செய்யலாம், வெண் பொங்கலைப் பொறுத்தவரை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்யலாம். வெண் பொங்கலைவிட சர்க்கரைப் பொங்கல் துர்க்கைக்கு உகந்தது. எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் இரண்டிலும் ஏதாவது ஒன்றினை செய்தல் போதுமானது.
 
நவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்

நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர்.

  துர்க்கைக்கு முதல் நாள் அன்று படைக்கப்படும் உணவுகள்:

 சுண்டலைப் பொறுத்தவரை தேங்காய் கலந்தும் தேங்காய் இல்லாமலும் செய்யலாம், வெண் பொங்கலைப் பொறுத்தவரை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்.

நவராத்திரியில் துர்க்கைக்கு  படைக்கப்படும் உணவுகள்

வெண் பொங்கலைவிட சர்க்கரைப் பொங்கல் துர்க்கைக்கு உகந்தது. எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் இரண்டிலும் ஏதாவது ஒன்றினை செய்தல் போதுமானது.

அவரவர் வசதிக்கேற்ப உணவு வகைகள் தயார் செய்யலாம். 9 வகைகள் கட்டாயம் இருக்கத் தேவையில்லை. ஒற்றை இலக்க எண்களில் வரும்படியாக 3 லிருந்து 15 வரையிலான உணவுகள் கூட வைக்கலாம்.

இரண்டாம் நாள் புளியோதரை அல்லது தயிர்சாதம் செய்யலாம், கூடுதலாக எள் சாதம் செய்வர், காரணம் எள் சாதம் செய்து வழிபட்டால், தோஷங்கள் குறையும் என்பது ஐதீகம். சில வீடுகளில் இரண்டாம் நாள் எள்ளினால் மட்டுமே அனைத்து உணவு வகைகளும் செய்து வழிபடும் வழக்கமும் உண்டு.

3 வது சர்க்கரைப் பொங்கலை பச்சரிசி அல்லது கோதுமை கொண்டு செய்து வழிபடுவர். சில இடங்களில் கேழ்வரகு பொங்கலும் உண்டு.

From around the web