ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி

ஒருநாள் காஷ்யபர் என்னும் ரிஷியின் மனைவி அதிதி நிறைமாதகர்ப்பிணியாய் இருந்தாள். ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டு, கதவை திறந்து பார்த்தாள். அங்கு ஒரு பிராமணன் நின்றிருந்தார். ”பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” என அவர் கேட்க, ” இரு கொண்டு வருகிறேன்” என அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்டபின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் . ”ஏன் லேட்டாக
 
ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி

ஒருநாள் காஷ்யபர் என்னும் ரிஷியின் மனைவி அதிதி நிறைமாதகர்ப்பிணியாய் இருந்தாள். ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டு, கதவை திறந்து பார்த்தாள். அங்கு ஒரு பிராமணன் நின்றிருந்தார். ”பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” என அவர் கேட்க, ” இரு கொண்டு வருகிறேன்” என அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்டபின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .

”ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா செய்துவிட்டாய். அதனால் உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்” என கோபித்து சாபமிட்டான். பிராமணனின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ”நீ இதற்கெல்லாம் வருந்தாதே, உலகினை உய்விக்கும்பொருட்டு அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Image result for ரத சப்தமி 2019

ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். 12/2/2019அன்று காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

From around the web