புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர்என்றும்
 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார்.

புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று

108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர்என்றும் பெயர் பெற்றது.

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார்.

இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.

ப்ருரூப சக்கரவர்த்தி என்பவர் இத்தலத்தை திருப்பணி செய்தபோதுமகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் ப்ரூரூபன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

ஒவ்வொரு வருடமும் மாசி மகம் நட்சத்திரத்தன்று லட்சுமியை நினைத்து இங்கு தெப்பத்தில் விளக்கு இட்டால் வாராத செல்வமும் வந்து சேரும் அழியாத ஞானமும் சுபிட்சமும் கிடைக்கும் என்பதால் மிகப்பெரும் அளவில் பெண் பக்தர்கள் இங்கு வந்து இந்த நாளில் வழிபடுகின்றனர்.

From around the web