புலியூரான் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்திவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கிஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்றபெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே விளக்கம்.. யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை
 
புலியூரான் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
    வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்..

யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

.

From around the web