திருவாசகம் – ஒரு பார்வை

திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”. சைவ சமயக்கடவுளான சிவன்மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே இந்த திருவாசகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்கள் உள்ளது. திருவாசகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவதாக விளங்குகிறது. இது மாணிக்க வாசகரால் அருளப்பட்டது. இந்நூல், உருகா உள்ளத்தையும் உருக்கி உயிர்க்குப் பசுத் துவங்கெடுத்துப் பதித்துவம் அருளவல்லது. ஆதலால் இது செந்தமிழுக்கு அன்பு மறையாய்ப் போற்றப் பெறுகின்றது. திருவாசகம் என்ற பெயர் திருவுடைய
 
திருவாசகம் – ஒரு பார்வை

திருவாசகத்துக்கு உருகாதார், 
ஒரு வாசகத்துக்கும் உருகார்”.

சைவ சமயக்கடவுளான சிவன்மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே இந்த திருவாசகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்கள் உள்ளது. திருவாசகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாவதாக விளங்குகிறது. இது மாணிக்க வாசகரால் அருளப்பட்டது. இந்நூல், உருகா உள்ளத்தையும் உருக்கி உயிர்க்குப் பசுத் துவங்கெடுத்துப் பதித்துவம் அருளவல்லது. ஆதலால் இது செந்தமிழுக்கு அன்பு மறையாய்ப் போற்றப் பெறுகின்றது. திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய அருள் நூல் எனப் பொருள்படும். திருவாசகத்தைத் தேன் எனக் கூறுதல் மரபு. தேன் உடற்பிணிக்கு மருந்தாதல் போல, இந்நூல் உயிர்ப்பிணிக்கு மருந்தாகும். 

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

திருவாசகம் – ஒரு பார்வைதிருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.

63 நாயன்மார்களில் மிக முக்கியமானவர்கள் என கருதப்படும் சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பேரை நால்வர் என அழைப்பர். அந்த நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய பாடல்களின் தொகுப்பே திருவாசகம் ஆகும். இனிவரும் நாட்களில் திருவாசகப்பாடலையும், அதன் விளக்கத்தையும் பார்ப்போம்…

From around the web