நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்

நவராத்திரி அன்று பலவகையான உணவுகளைப் பரிமாறுகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர். அதில் முதல் நாள் அன்று சுண்டல், வெண் பொங்கல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, பருப்பு வடை. இரண்டாம் நாள் புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம். மூன்றாவது நாள் கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல் ஆகியவற்றை
 

நவராத்திரி அன்று பலவகையான உணவுகளைப் பரிமாறுகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை வைத்து சாமியை வணங்குகின்றனர். இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகின்றனர்.

     அதில் முதல் நாள் அன்று சுண்டல், வெண் பொங்கல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, பருப்பு வடை. இரண்டாம் நாள் புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம். மூன்றாவது நாள் கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல் ஆகியவற்றை கொண்டு வணங்குகின்றனர்.

நவராத்திரி சிறப்பு உணவு வகைகள்

     அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியை வணங்குகிறார்கள் அதில் முதல் நாள் அன்று தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்பசாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல். இரண்டாம் நாள் சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால்சாதம், பூம்பருப்பு சுண்டல். மூன்றாம் நாள் தேங்காய்சாதம், தேங்காய் பால் பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் ஆகியவற்றை  கொண்டு வணங்குகிறார்கள்.

     அடுத்து சரஸ்வதியை வணங்குகிறார்கள் அதில் முதல் நாள் எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு. இரண்டாம் நாள் பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். மூன்றாம் நாள் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை ஆகியவை கொண்டு வணங்குகிறார்கள்.

 பத்தாவது நாள் அன்று பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள் ஆகியவற்றை கொண்டு வணங்குகிறார்கள்.

From around the web