நவராத்திரியும் கொலுவும்

நவராத்திரியின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது கொலு வைத்தலாகும். கொலு வைத்து சிறப்பு பூஜை செய்து அம்பிகை வழிபடுதல் வழக்கமான ஒன்றாகும். கொலு என்றால் அழகு என்று பொருளாகும். நவராத்திரி கொலு பூஜையில் எப்போதும் முதல் வழிபாடு சிவபெருமானுக்கு உரியதாகும். பல வீடுகளிலும் கொலு வைத்து நவராத்திரியை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஒரு மேடையில் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் என்று ஒற்றைப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். கொலுவில் களிமண்ணால் ஆன பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். தெய்வங்கள் பொம்மைகள்
 
நவராத்திரியும் கொலுவும்

நவராத்திரியின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது கொலு வைத்தலாகும். கொலு வைத்து சிறப்பு பூஜை செய்து அம்பிகை வழிபடுதல் வழக்கமான ஒன்றாகும்.

கொலு என்றால் அழகு என்று பொருளாகும். நவராத்திரி கொலு பூஜையில் எப்போதும் முதல் வழிபாடு சிவபெருமானுக்கு உரியதாகும்.

பல வீடுகளிலும் கொலு வைத்து நவராத்திரியை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியும் கொலுவும்

ஒரு மேடையில் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் என்று ஒற்றைப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். கொலுவில் களிமண்ணால் ஆன பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். தெய்வங்கள் பொம்மைகள் மட்டுமின்றி மனிதர்கள், காவலர்கள், விவசாயி, மூன்று குரங்கு பொம்மைகளும் இருக்கும்.

கொலு வைத்து வழிபடுதலில் மற்றொரு சிறப்பு அக்கம் பக்கத்தினர் சேர்ந்து ஒன்று கூடி நவராத்திரி பாடல் பாடுவது மற்றும் புராணக்கதைகள் கூறி மகிழ்ந்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.

நவராத்திரியில் கொலு என்பது முக்கியமாகும். ஒன்பது நாளும் கொலுவை பூஜிப்பதால் சகல செல்வங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

நவராத்திரியின் கொலுவின் பலன்கள் கன்னிப்பெண்கள் பூஜிப்பதால் திருமணம் கைகூடும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் வலுவடையும், வயதானவர்களுக்கு மன நிறைவு மற்றும் ஆனந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வழக்கத்தில் உள்ளது.

இவ்வாறு நவராத்திரியும், கொலுவின் சிற்ப்பம்சங்களாக விளங்குவதால் இன்றும் கொலு கடைப்பிடிக்கப்பட்டு, இந்த வழிபாடு இல்லங்களிலும் கோவில்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.

From around the web