கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை

கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை என்னவென்று பார்க்கலாம்…. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடும்கோபம் கொண்ட
 
கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை


கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய கதை என்னவென்று பார்க்கலாம்….

ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடும்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்தமரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை

ஆனால், மரம் வெட்டிய அதே இடத்திலிருந்து அடுத்தசில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப் போலவே கம்பீரமாக எழுந்து நின்றதை மக்கள் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் பார்க்கத் தொடங்கினார்கள். பாதிரியார் போனிபஸ் தனது ஊழியத்தை முடித்துக்க்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்துவ வழிபாட்டில் பத்தாம் நூர்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது. ஆனால் கிறிஸ்துமஸ் மரமாக அது அப்போது உருப்பெறவில்லை.

கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை

மார்ட்டின் லூதர் வியந்த ஒளி மரம்

சீர்திருத்த கிறிஸ்துவ மதம் உருவாகக் காரணமாக இருந்த மார்ட்டின் லூதர் கிங்கும் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்தான். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார். இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களின் வர்த்தகச் சந்தை இன்று அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 70 ஆயிரம் மில்லியன் டாலர்கள் மதிப்பு. இதுவே மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கு..

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

From around the web