ஐயப்பன் கோவில் நடை திறப்பு புதிய விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதி

ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது பற்றிய செய்தி
 

கடந்த கொரொனா காலத்தில் இது வரை இல்லாத அளவுக்கு பல கோவில்களின் நடை சாற்றப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட நீண்ட வருடங்களாக அடைக்கப்படாமல் இருந்து 150 நாட்கள் அடைக்கப்பட்டது. இது போல் இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கும் இந்திய அளவில் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த கொரோனா காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஐயப்ப சீசன் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜை காலம் முடிந்து கடந்த தை மாதம் அடைக்கப்பட்டது. இருப்பினும் மாதா மாதம் தமிழ் மாதத்தின் முதல் 3 நாட்கள் ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதுண்டு.

பங்குனி   மாத பூஜைகள் மற்றும் ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் 28ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும். இதில் தினமும் 5,000 பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதற்கான ஆன்ைலன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்து விட்டது. இந்த நிலையில் சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

From around the web