தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

விநாயகர் சதுர்த்தியானது தமிழகமெங்கும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மற்றும் பிள்ளையார் பட்டி விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். துர்வா கணபதி விரதம்: துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லை குறிப்பதாகும். இதன் படி விநாயகருக்கு விரதம் இருந்து, அருகம்புல் மாலை இட்டு வழிபட்டுவது இந்த
 
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்

விநாயகர் சதுர்த்தியானது தமிழகமெங்கும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மற்றும் பிள்ளையார் பட்டி  விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர்.

துர்வா கணபதி விரதம்:

      துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லை குறிப்பதாகும்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

இதன் படி விநாயகருக்கு விரதம் இருந்து, அருகம்புல் மாலை இட்டு வழிபட்டுவது இந்த நாளின் சிறப்பாக அமைகிறது.

ஈச்சனாரி விநாயகர் கோவில்:

      இந்த விநாயகர் கோவில் கோவையில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுமார் பத்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது . இங்கு உள்ள விநாயகர் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. மேலும் இங்குள்ள விநாயகர் மதுரையிலிருந்து பேரூர் பட்டீஸ்வரர் சிவன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது, வழியில் அச்சு முறிந்து சிலையை நகர்த்த முடியாமல் அங்கயே விநாயகருக்கு கோவில் அமைக்கப்பட்டு விட்டது. இதுவே இந்த கோவிலின் வரலாற்றுக் கதையாகும்.

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்:

       சிறிய குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிள்ளையார்பட்டி. இங்குள்ள விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி என்பதற்க்கு ஒளிமிக்க அல்லது அழகான என்பது பொருள்.  இங்குதான் விநாயகர் சதுர்த்தி மிகவும் விசேசமானது.  மொத்தமாக ஒன்பது நாட்கள் இங்கு திருவிழா நடைபெருகிறது. ஒன்பதாவது நாளில் தேர் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெருகிறது.

From around the web