விநாயகர் சதுர்த்தி 2019!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி வரும் நாள் அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில் வளர்பிறை அதாவது செப்டம்பர் 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயக சதுர்த்தி வருகின்றது. எந்த காரியம் தொடங்கும்போதும் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். மற்ற கடவுள்களுக்கு பூஜை செய்தாலும், முதலில் பிள்ளையாரை மஞ்சளால் பிடித்து பூஜை செய்த பிறகே மற்ற தெய்வங்களை வணங்க தொடங்குவார்கள். விநாயகரின் மூக்கு பிரம்மா, முகம் விஷ்ணு
 
Vinayagar chathurthi poojai

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி வரும் நாள் அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில் வளர்பிறை அதாவது செப்டம்பர் 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயக சதுர்த்தி வருகின்றது. எந்த காரியம் தொடங்கும்போதும் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். மற்ற கடவுள்களுக்கு பூஜை செய்தாலும், முதலில் பிள்ளையாரை மஞ்சளால் பிடித்து பூஜை செய்த பிறகே மற்ற தெய்வங்களை வணங்க தொடங்குவார்கள்.

விநாயகரின் மூக்கு பிரம்மா, முகம் விஷ்ணு , இடது பாகம் சக்தி, வலது பாகம்  சூரியன், கண்கள் சிவன் என்பதை குறிக்கின்றது. விநாயகர் தன் தந்தத்தை உடைத்து நான்கு வேதங்களையும் எழுதி உள்ளார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் வேதங்களும் நிலை பெற்றது விநாயகரால் தான் என்று பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணபதி பூஜை கைமேல் பலன் என்று கூறுவார்கள். எந்த கோரிக்கைகள் இருந்தாலும் நாம் முழு மனதார கணேசனை பூஜை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும். தினமும் ‘ஓம் மஹா கணபதியே’ என்ற மந்திரத்தை சொல்லி வந்தால் நமது வல்வினைகளை எல்லாம் தீர்ப்பார். நமக்கு ஏற்படுகின்ற ஆபத்துகள், அச்சம், வீண் பயம் நமது பக்கம் வராமல் விநாயகர் தடுத்து விடுவார்.

பூஜை செய்யும் முறை:

அதிகாலை எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போடுங்கள். மாவிலைகளை எடுத்து வீட்டு வாசலில் தோரணமாக கட்டி வைத்து விடுங்கள். மண்ணினால் செய்த விநாயகரை அவரவர்களின் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மண்ணினால் பிடித்த பிள்ளையாரை ஒரு பலகை மனையில் வைத்து விடுங்கள். அந்த பலகை மனையின் இருபுறமும் குத்துவிளக்கை ஏற்றி வையுங்கள்.

பிள்ளையாருக்கு சந்தனம், குங்கும பொட்டு வையுங்கள். எருக்கம் பூ, தும்பை பூ மற்றும் விநாயகருக்கு உகந்த மலர்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம் புல் ஆகும். அதில் இருந்து ஜீவ ஆத்மாக்கள்  உருவம் எடுத்தன. உலகில் முதன் முதலில் தோன்றியது அருகம்புல் தான். எனவே விநாயகரின் அருள் பெற அருகம் புல் கொண்டு அவரை பூஜை செய்ய வேண்டும்.

ஒரு முழு வாழையிலை எடுத்து அதில் நெய்வேத்தியங்களை எடுத்து வையுங்கள். விநாயகருக்கு மோதகம் மிகவும் பிடித்தமானது. அவருக்கு விதவிதமான பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், பாயசம் செய்தும் படைக்கலாம். இந்த மோதகம் படைப்பதற்கு எதற்ககாக என்றால் பக்தி கலந்த நமது வாழ்க்கை சுவையானதாக இருக்கும் என்பதை குறிக்கும்.

பிள்ளையாருக்கு தூபம் ஏற்றி காட்ட வேண்டும். அவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து இலையில் இருபுறமும் வைத்து விடுங்கள்.  பிறகு இந்த மந்திரத்தை தலையில் குட்டிக்கொண்டே சொல்ல வேண்டும், “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்  சதுர்புஜம், பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே” என்று சொல்ல வேண்டும். பிள்ளையாரின் அகவல் , காயத்திரி மந்திரம், சுலோகங்களை படிக்கலாம்.

மண் பிள்ளையாரை வாங்குபவர்கள் மூன்றாம் நாளில் நீர்நிலைகளில் மூழ்க விட்டுவிடுவார்கள். இந்த பூஜையை குழந்தைகள் முதல் திருமணம் ஆகாத பிள்ளைகள் வரை செய்வது மிகவும் சிறப்பாகும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையக்கூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் தம்பதியருக்கு நல்ல குழந்தை வரம் கிடைக்கும்.

From around the web