சிவபெருமானுக்கு உகந்த 16 சோமவார விரதம்!!

சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையில் செய்யு விரதம்தான் சோமவார விரதம். இந்த விரதத்தினை 16 திங்கட்கிழமைகள் சிவபெருமானின் அனுகூலத்தைப் பெற வேண்டும் என்று கருதி விரதம் இருந்தால் நிச்சயம் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி சிறப்பான பலனைப் பெற முடியும்.

 
 

சிவ பெருமானுக்கு உகந்த திங்கட் கிழமையில் செய்யு விரதம்தான் சோமவார விரதம், இந்த விரதத்தினை 16 திங்கட்கிழமைகள் சிவ பெருமானின் அனுகூலத்தைப் பெற வேண்டும் என்ரு கருதி இருந்தால் நிச்சயம் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி சிறப்பான பலனைப் பெற முடியும்.

அதாவது 16 வாரங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும், அதாவது காலையில் எழுந்து வீட்டினை சுத்தம் செய்தல் வேண்டும்.

மேலும் பூஜையறையினை புதுத் துணியால் துடைத்துவிட்டு, பூஜை அறையில் உள்ள புகைப்படங்களை துடைத்து பூக்களால் மாலை கொய்து மாலையிட வேண்டும். மேலும் சிவபெருமான் புகைப்படத்தின் மீது திருநீறு பூசிட வேண்டும்.

மேலும் மொச்சை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் செய்து  சிவனுக்குப் படைத்தல் வேண்டும். இந்த பதார்த்தங்களை ஏழைக் குழந்தைகளுக்கும், அண்டை வீட்டார்களுக்கும் கொடுத்தல் வேண்டும்.

ஆனால் விரதம் இருப்போர் திங்கள் கிழமை முழுவதும் தண்ணீர், பால் பழம் தவிர வேறு எதையும் உண்ணாமல் இருத்தல் வேண்டும். மாலை நேரம் அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

From around the web