Connect with us

சர்வதேச அளவில் முன்னேற்றம் அடைந்தாலும் ஆன்மீக பாதைகளை விட்டுவிடக்கூடாது!!!

202112181103494775 Prime Minister Modi is reportedly coming to Chennai to open SECVPF

செய்திகள்

சர்வதேச அளவில் முன்னேற்றம் அடைந்தாலும் ஆன்மீக பாதைகளை விட்டுவிடக்கூடாது!!!

வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக நம் இந்திய அரசு வளர்ந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்களை கூறியுள்ளார். அதன்படி அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா சர்வதேச அளவில் தடம்பதிக்க உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய உறுதி ஏற்கவும், புதிய இலக்குகளை தீர்மானிக்கவும் உரிய நேரம் இது என்றும் அறிவித்தார். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் நோக்கிய பயணத்தில் சர்வதேச அளவிலான சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கான நமது இந்தியாவும் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பல நாடுகள், பல நாகரீகங்கள் ஆன்மீக பாதையை விட்டு விட்டு பொருள் தேடும் வழியில் விரைந்துள்ளதாக குற்றச்சாட்டை வைத்தார்.

மற்ற நாடுகள் செய்யும் அதே தவறை நாம் இந்தியாவும் செய்யக்கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்வதேச சாதனைகளை படைக்கும் அதேநேரத்தில் நாட்டு மக்கள் ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும், மகான்கள், ஆன்மிகப் பெரியவர்கள் விட்டு சென்ற நல்ல சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை தொடர பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top