மாசி மகா மகத்தின் சிறப்புகள்….

30726542eeffd42332a18fc663c0c3fc

மாசி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுவது மாசி மகா மகம். இந்த மாசி மகம் நாள் என்று எந்த நாளை சொல்கிறோம் என்றால் சூரியன் கும்ப ராசியில் இருக்கும்போது சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சரிப்பார். பௌர்ணமியுடன் கூடிய இந்த நாளே மாசி மகமாக கருதப்படுகிறது.

மாசி மாதமே ஒரு புனித மாதமாக கருதப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் தான் இந்த மாதத்தில் கொண்டாடப்படும் மாசி மகா மகமும் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மாதம்  நம் பாவத்தை போக்குவதற்கு மிக சிறந்த மாதம் என்று நேற்றே பார்த்தோம்.

அதுவும் மற்ற மாசி மாத நாட்களை விட இந்த மாசி மகா மக நாளே நாம் செய்த  பாவத்தை கழுவுவதற்கு மிகவும் ஏற்ற நாள். கும்பகோணத்தில் இந்த மகாமகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதேபோன்று மாசிமகம் வட இந்தியாவிலும் கும்பமேளா என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதே நாளில் தான் உமாதேவியார் தாட்சிணியாக அதாவது தட்சனின் மகளாக உருவெடுத்தார்.

இந்த மாசி மகா மகம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும். இதனாலேயே இது வெகு விமர்சியாக கொண்டாடப் படுகிறது என்று சொல்லலாம். மேலும் இந்த நாளில் புனித தலங்களில் நீராடினால் நாம் செய்த பாவம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.