தை அமாவாசையின் சிறப்புகள்…..

6085a84081fefb25cf4d8a85e91a7768

ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பௌர்ணமியும் வரும். பௌர்ணமி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் அமாவாசையும் மிகவும் முக்கியம். அதாவது வருடத்தில் சில மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகச் சிறப்பானது. ஒன்று ஆடி அமாவாசை , மற்றொன்று தை அமாவாசை. இன்று நாம் தை அமாவாசையைப் பற்றி பார்ப்போம்.

ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களை வரவேற்ற நாம் தை அமாவாசை அன்று அவர்களை விடை கொடுத்து அனுப்புகிறோம். அதாவது இந்த அமாவாசை நாளன்று நாம் இறந்த முன்னோர்களுக்கு தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இட்டு திதி கொடுப்போம்.

மற்ற அமாவாசையை காட்டிலும் இந்த தை அமாவாசையில் தான் நாம் பெரியோர்களை வணங்கி அவர்களுக்கு திதி கொடுப்பது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் தை அமாவாசை என்பது சூரியனுக்கு மிகவும் உகந்த நாள்.

மேலும் இந்த தை அமாவாசையில் சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் இருப்பதால் இந்த அமாவாசை நமக்கு மிகவும் சிறப்பானது.

இந்த நாளன்று நாம் பெரியோர்களை நினைவு கூர்ந்து அவர்களை வணங்கும் போது அவர்கள் மகிழ்ந்து நம்மை ஆசிர் வதிப்பர். மேலும் அவர்கள் ஆசிர்வாதம் நம் குழந்தைகளையும், நம்மையும் நன்றாக வாழ வைக்கும். எனவே தான் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.