விஷூ பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் – கண்ணூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண்: 06047, அதிவிரைவு விழா சிறப்புக் கட்டண சிறப்பு ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 13ஆம் தேதி மதியம் 03:10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 05:15 மணிக்கு கண்ணூர் ஜூனை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
திரும்பும் ரயில் (எண்: 06048) கண்ணூரில் இருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 08:35 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 10:35 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிவிரைவு சிறப்பு கட்டண சிறப்பு ரயிலுக்கு பெரம்பூரில் கூடுதல் நிறுத்தம் இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்., 13ல் புறப்படும் சிறப்பு ரயில், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. திருப்பூர், கோயம்புத்தூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய நகரங்களில் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது .
ஆவின் பால் பொருட்கள் – ஆன்லைன்களில் விற்பனை
பண்டிகை சிறப்பு கட்டண சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 5 ஆம் தேதி திறக்கப்பட்டது.