Connect with us

அடி தூள்!! செப்.7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம்!!

ரயில்வேல வேலை வேணுமா அப்போ 45 லட்சம் கொடு மோசடி

தமிழகம்

அடி தூள்!! செப்.7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம்!!

மதுரை வழியாக மைசூர் – திருவனந்தபுரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்மேற்கு இரயில்வே நிலையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 8-ம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர் – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, செப்டம்பர் 7-ம் தேதி முதல் மதியம் 12.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் மறு மார்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது. இத்தைய அறிவிப்பினால் இரயில்வே பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top