ஸ்பா, மசாஜ் சென்டர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும்-டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நம் தமிழகத்தில் அதிக அளவு ஸ்பா, மசாஜ் சென்டர்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கிளப், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம்

அதன்படி பதிவு செய்யப்பட்ட கிளப், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிக்க  சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி அல்லது ஆணையர் தலைமையில் குழுக்களை அமைக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதிவு பெற்ற சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து காவல் துறையினர் இன்னும் நான்கு வாரங்களில் டிஜிபி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உறுப்பினர்கள் மது அருந்த உரிமம் பெறவேண்டும் என்ற காவல்துறை உத்தரவை எதிர்த்து டென்னிஸ் கிளப் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிஜிபிக்கு இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment