டெல்லியில் இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!! காரணம் பாஜகவா?

யாரும் எதிர்பாராதவிதமாக ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி காணப்படுகிறது. ஏனென்றால் மத்தியில் டெல்லியில் முதலில் ஆம் ஆத்மி சட்டமன்றத்தை கைப்பற்றியது. தற்போது டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி புதிதாக பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று அங்கும் ஆட்சி செய்து கொண்டு வருகிறது. இதனால் டெல்லி மற்றும் பஞ்சாப் இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஒரு தேசிய கட்சியாக மாறி உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடையே நடந்த சில நாட்களாக பெரும் பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்து வந்ததாக தகவல்கள் கசிந்தது. இது ஆம் ஆத்மி கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில் சட்டப்பேரவை கூடுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment