200 வார்டுகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்; தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையும் எதிரொலியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீர் வீடுகளுக்குள் உட்புகுந்து உள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்தது போல மீண்டும் ஒரு துயர சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

ஸ்டாலின்

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். அவர் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் சென்னையில் புதிதாக சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழையை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளன.

ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பருவமழையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் நிலையில் அதை தடுப்பதற்காக இந்த சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment