கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் – தமிழக அரசு புதிய முயற்சி!

மாநிலம் முழுவதும் கைதிகளுக்காக சிறப்பு எழுத்தறிவு திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், சிறைக்கைதிகள் விடுபட்டு வெளியே செல்லும் போது அவர்கள் சம்பாதிக்கும் திறனுக்கு உதவக்கூடிய அடிப்படைக் கல்வியை வழங்குவதாகும்.

அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் ஒரு பிரிவான முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையிடம் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிறைகளில் உள்ள மொத்த படிப்பறிவில்லாதவர்களின் விபரங்களை பெற ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்று SED இன் மூத்த அதிகாரி கூறினார். “மொத்தம் 1,249 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80% க்கும் அதிகமானோர் தங்கள் சொந்த பெயரில் கையெழுத்திடத் தெரியாதவர்கள் . இத்திட்டத்தில் பெண் கைதிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவர்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடையாளம் காணப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களை இத்திட்டம் வழங்கப்படவுள்ளது. “கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையானது துறையில் நிபுணத்துவம் வாய்ந்த தன்னார்வலர்களால் நடத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்திற்கு மாநில அரசு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.இந்த திட்டத்தைத் தொடங்க விரிவான பயிற்சிப் பொருட்கள் மற்றும் கருவிகள் விரைவில் கிடைக்க பெரும் என்றும் ,மேலும் “திட்டத்தின் நேரம் மற்றும் காலம் சிறைத்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்படும். சிறை வளாகத்தினுள் பயிற்சி மையங்களும் ஏற்படுத்தப்படும்” என்று அந்த அதிகாரி விளக்கினார்.

வேலை தேடும் இளைஞர்களே உங்களுக்கான நற்செய்தி – மே 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

புதிய கல்வியறிவு பெற்றவர்கள் தங்கள் கற்றலைத் தொடர இத்திட்டம் வாய்ப்பளிக்கும். “தொழில் திறன் கொண்ட கைதிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்த திட்டம் மேலும் உதவும்” என்று அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.