சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி: தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் படி, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவி போன்ற திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அச்சச்சோ!! நடிகை சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி?

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் நகர்ப்புரங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் சரிசெய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.