என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தலைமையில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை!

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ஒவ்வொரு ஒடுக்குமுறையும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. ஆயினும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் பல வன்முறையான ஒடுக்கு முறைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கட்டப்பஞ்சாயத்து.

தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து ஆங்காங்கே காணப்படுகின்றன. இவை கிராமங்கள் மட்டுமின்றி பெருநகரங்களிலும் காணப்படுகின்றன. பல இடங்களில் சினிமா பாணியில் கட்டப் பஞ்சாயத்துகள் இன்றளவும் நடைபெற்று கொண்டே தான் வருகிறது. நம் தலைநகர் சென்னையில் அதிக அளவு நிகழ்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து தடுக்க சிறப்பு படை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழிலதிபர்களிடம் பண மோசடி சம்பவம் குறைய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment