Connect with us

திருப்பதியில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்களுக்கு சிறப்பு தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு !!

202203180808588619 Tamil News Tirupati Ezhumalayan arjitha seva tickets released on 20th SECVPF 1

Tamil Nadu

திருப்பதியில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்களுக்கு சிறப்பு தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு !!

திருப்பதியில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்களுக்கு சிறப்பு தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு !!

இந்தியாவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தரிசம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று படி படியாக  குறைந்து வருவதால் தற்போது ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்காக திங்கள் முதல் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாள்தோறும் ஆயிரம் பக்தர்கள் விதம் இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top