தொடர் விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி !!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் மாலை நேரங்களிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த சூழலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க பள்ளிக் கல்வித்துறை தடைவிதித்துள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த உத்தரவை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment