தாபா ஸ்டைல் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட்! இனி நம்ம வீட்டுலையும்…

சிக்கனை பல வகைகளில் சமைக்கலாம். அதை தோசை, சப்பாத்தி, சாதம் என தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

சர்க்கரை – 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 2 தேக்கரண்டி

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

வரமிளகாய் – 2

அரைத்த தக்காளி – 1 கப்

நெய் – 10 தேக்கரண்டி

கொத்தமல்லி – 1/2 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு .

செய்முறை:

சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் தாளிக்கவும்.

அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

மேலும் அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்… சிக்கன் சூப் குடிக்கலாம் வாங்க…

பிறகு அதில் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து , மூடி வைத்து  10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.

சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews