பொங்கலுக்கு ஊருக்கு செல்ல கவலையே வேண்டாம்; திட்டமிடப்பட்டபடி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!:தமிழக அரசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. இதன் காரணமாக வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக போக்குவரத்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் நாளை முதல் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

அதன் படி நாளை முதல் 13ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். பொங்கலை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 16,768 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

கே.கே நகரில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லலாம் என்றும் அமைச்சர் கூறினார். தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் தஞ்சாவூர் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லலாம் என்றும் அவர் கூறினார். திட்டமிட்டபடி நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. நாளை முதல் அதாவது ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 10300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 6468 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் கும்பகோணம் பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment