ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேட்டில் இருந்து இன்று 300 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரை போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும்.
கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவைத்து வழக்கம்.
ஆகஸ்ட் மாதம் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – உதயநிதி
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுமுறையை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களில் தினமும் 2,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ் புத்தாண்டுக்கு 300 பஸ்களும், ரம்ஜான் பண்டிகைக்கு 200 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.