தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் 6 இடங்களில் இருந்து ஸ்பெஷல் பஸ்!

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தீபாவளி பண்டிகை நாளையொட்டி தமிழகத்தில் கூடுதல் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.பேருந்து

அதன்படி சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 இடங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையிலும், பயணிகள் திரும்பிவர நவம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு செங்குன்றம், பொன்னேரி வழியாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கே.கே நகர் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, போளூர் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லும் என்றும் கூறப்படுகிறது.

பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து மயிலாடுதுறை, மதுரை, ஈரோடு, கோவை, பெங்களூருவுக்கு பேருந்து சேவை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment