ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: எவ்வளவு தெரியுமா?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசுகள் என ஊக்கத்தொகை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஷன் கடை ஊழியர்கள் ஊக்கத்தொகை வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி வழங்கும் விற்பனையாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்குவதாக கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை காரணமாக ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.