நடிகர் ரஜினி தற்போழுது தனது 169 வது படமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிகையுள்ளார் .
கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரங்கள் எல்லாம் புதிதல்ல. தமிழகத்தில் அதிக வரி செலுத்துபவராக திஸ்பியன் விருது பெற்று பெருமைக்குரியவர்.
இந்நிலையில் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னையில் நடந்த விருதை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையின் சார்பில் ஏற்றுக்கொண்டார். மற்ற வழக்கமான வரி செலுத்துபவர்களும் அரசு விழாவில் பாராட்டப்பட்டனர்.
மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அஜித்தை இனிமே பார்க்க முடியாதா? என்ன காரணமா இருக்கும்!
ஆனால் இந்த படத்திற்கான பூஜை ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் , படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
@LGov_Puducherry @TelanganaGuv @DrTamilisaiGuv felicitating the tax payers including @rajinikanth during the Income Tax Day celebrations at Chennai today. Chief Justice of Madras High Court, Justice Munishwar Nath Bhandari and Pr. Chief Comm of @tn_incometax is also seen pic.twitter.com/9Z4Ojhnwph
— PIB in Tamil Nadu (@pibchennai) July 24, 2022