மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ

தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கொண்டாடி வருகிறது, ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனினும், அதனை ஈடுகட்டும்விதமாக ஒவ்வொரு தமிழரும், தங்களுடைய சொந்த வீட்டின் விழாவினைப் போல கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரலாறு காணாத பிறந்தநாள் வாழ்த்துகள் பரிமாறப்படுகிறது. இந்த 380வது மெட்ராஸ் டே வை மிக விமரிசையாக மட்டுமல்லாமல், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்விதமாக சென்னை மெட்ரோ கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும், தி நியூ
 
மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ

தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கொண்டாடி வருகிறது, ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனினும், அதனை ஈடுகட்டும்விதமாக ஒவ்வொரு தமிழரும், தங்களுடைய சொந்த வீட்டின் விழாவினைப் போல கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வரலாறு காணாத பிறந்தநாள் வாழ்த்துகள் பரிமாறப்படுகிறது. இந்த 380வது மெட்ராஸ் டே வை மிக விமரிசையாக மட்டுமல்லாமல், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்விதமாக சென்னை மெட்ரோ கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் இணைந்து தினமும் 25 நபர்களுக்கு நான்கு நாட்களுக்கு இலவச பயணம் அழைத்து செல்லவுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் சினிமா நட்சத்திரம் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் எனவும் அறிவித்துள்ளது.

இந்த மினிப் பெட்டி ரயிலில் சென்னையின் பழங்கால போட்டோக்கள், வரலாற்றுத் தகவல்கள், போன்றவை பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 22ம் தேதி இது புறப்பட உள்ளது.

இந்த சுற்றிக் காட்டும் விழாவானது காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

From around the web