இயற்கையின் மாபெரும் சாம்ராஜ்யம்!

70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை அன்னை உழி கொண்டு செதுக்கியது போல் ஒரு அதியமும் மர்ம்மும் நிறைந்த பள்ளத்தாக்கு பற்றி யாவரும் அறிந்திருப்போம். அதிசயமே அசந்து போகும் அதிசயங்கள் இவ்வுலகில் ஏராளம். அப்படிப்பட்ட 7 உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் கேனியன் (Great Canyon) பள்ளத்தாக்கு பூவுலகின் வரபிரசாதம் என்றே சொல்ல்லாம். பார்ப்பவர்களை கண்கவரும் கவர்ச்சி இதற்கு உண்டு. பள்ளதாக்கின் மேலே மிகுந்த குளிரை கொண்ட இப்பகுதி ஒரே மாதிரியான சீதோஷன நிலையை அங்கு கொண்டிருக்கவில்லை.
 
Arizona GC NP

70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை அன்னை உழி கொண்டு  செதுக்கியது போல் ஒரு அதியமும் மர்ம்மும் நிறைந்த பள்ளத்தாக்கு பற்றி யாவரும் அறிந்திருப்போம். அதிசயமே அசந்து போகும் அதிசயங்கள் இவ்வுலகில் ஏராளம். அப்படிப்பட்ட 7 உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் கேனியன் (Great Canyon) பள்ளத்தாக்கு பூவுலகின் வரபிரசாதம் என்றே சொல்ல்லாம். பார்ப்பவர்களை கண்கவரும் கவர்ச்சி இதற்கு உண்டு. பள்ளதாக்கின் மேலே மிகுந்த குளிரை கொண்ட இப்பகுதி ஒரே மாதிரியான சீதோஷன நிலையை அங்கு கொண்டிருக்கவில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், அருகில் நின்றதும், வீரிட்டு வீசும் காற்றின் வேகமும், குளிரும் நம்மை கொஞ்சம் தயங்கவே செய்கின்றது.

உலகின் மிக முக்கியமான சுற்றுலா தலமான இப்பகுதி பூமி வரலாற்றின் ஒரு பிள்ளையார் சுழி என்றே சொல்ல்லாம்.

பிரமாண்ட பள்ளத்தாக்கு பற்றி உலகிற்கு எடுத்து சொல்ல 2012 இல் இங்கே  ஆய்வொன்று நடந்த்து. ஆய்வின் முடிவில் பல ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அந்த உண்மை என்னவென்றால் கொலராடோ ஆற்றின் மிக பழமையான இப்பள்ளத்தாக்கு சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் இயற்கையின் கடும் முயற்சியால் உருவாக்கப்பட்ட்து. அதன் மேலே உள்ள வரிவரியான தோற்றம் நீரோட்டம் போனதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது. இன்னும் சிலர் இதில் லாவா குழம்பு சென்றதாலயே வரிவரியான தோற்றம் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பருவ நிலை மாற்றங்கள் வானிலையால் இங்கு தீர்மானிக்கப்படுவதில்லை. இங்குள்ள பருவ நிலைக்கு இப்பள்ளத்தாக்கே காரணம். வடக்கு விளிம்பிலுள்ள பிரைட் அங்கெல் காட்டிலாகா நிலையம் (right Angel Ranger Station) மிக குளிர்ந்த பள்ளத்தாக்காகவும், மிக வெப்பமான நிலையம் இங்கிருந்து 8 மைல் தூரத்திலிருக்கும் பான்டோம் (Phantom Ranch) திறந்தவெளி  இடமாகும்.

இந்த பள்ளத்தாக்கு மிக பழமையாக இருந்த போதிலும் இங்கு எந்த டைனோசர் இனத்தின் எலும்புகளோ படிமங்களோ கண்டெடுக்கப்படவில்லை.

இங்கு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள படிமங்கள் அனைத்தும் 1.2 பில்லியன் முதல் 10,000 வருடங்கள் பழமையானவை.

கொலராடோ ஆற்றில் 8 வகையான தனித்துவமான மீன் வகைகள் உள்ளன. ஆனால் அதில்  6 வகையான சிறப்பம்சம் கொண்ட மீன் வகைகள் மட்டுமே கொலராடோ ஆற்றின் வெளியே தென்பட்டுள்ளது.

உலகில் உள்ள சிறப்புமிக்க புவியியல் நிகழ்விற்கு இந்த பிரமாண்ட பள்ளத்தாக்கு ஒரு எடுத்துக்காட்டு. 250 மில்லியன் வருடங்கள் ஆன பாறையடுக்குகள் அனைத்தும் 1.2 பில்லியன் வருடங்கள் ஆன பாறையின் மேல் அமைந்து ரோஜா மலரின் அடுக்கினை நினைவுப்படுத்துகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு என்ன நிகழ்ந்தது என்று யாராலும் கூறமுடியாத கணிக்க முடியாத மர்மமாகவே இன்று வரை இருக்கிறது.

கிராண்ட் கேன்யன் வரலாற்றில் அங்குள்ள மக்களைப் பற்றிய தகவல்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அங்கு வரலாறு ஒன்று இருக்கிறது. நேட்டிவ் அமெரிக்கன் (Native American) ரிசர்வேசனில் உள்ள கிராண்ட் கேன்யனின் அடிவாரத்தில் சுப்பாய் (Supai) பழங்குடி இன மக்கள் உள்ளனர். சாலை மூலம் அணுக முடியாத இவரகள் வெறும் 208 பேர் மட்டுமே உள்ளனர். இன்றும் இவர்கள் கடிதங்கள் மற்றும் கழுதைகள் மூலமாக தான் தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.

கிராண்ட் கேனியன் குறித்த அனைத்து உண்மைகளையும் அனைவரும் அறிந்திருப்போம், ஆனாலும் இந்த அரிசோனா மாகாணம் இன்னும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.

From around the web