புதுமணத் தம்பதிகளுக்கான தலை தீபாவளி!!!!

தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விழாவாக இருந்துவருகிறது, இவர்களையும் தாண்டி ஒருவருக்கு தீபாவளி திருமண நாள் போல் ஷ்பெஷலாக இருக்கும். யார் அவர்கள்? என்கிறீர்களா? அவர்கள் வேறு யாருமல்ல. புதுமணத் தம்பதிகள் தான். தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். மருமகனுக்கு ஷ்பெஷல் விருந்து மாமனார் வீட்டில் இருந்து கொடுக்கப்படும், காலையில் தம்பதிகள் தலையில் எண்ணெய்
 
புதுமணத் தம்பதிகளுக்கான தலை தீபாவளி!!!!

தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விழாவாக இருந்துவருகிறது, இவர்களையும் தாண்டி ஒருவருக்கு  தீபாவளி திருமண நாள் போல் ஷ்பெஷலாக இருக்கும். யார் அவர்கள்? என்கிறீர்களா? அவர்கள் வேறு யாருமல்ல. புதுமணத் தம்பதிகள் தான்.

தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார்.

புதுமணத் தம்பதிகளுக்கான தலை தீபாவளி!!!!

மருமகனுக்கு ஷ்பெஷல் விருந்து மாமனார் வீட்டில் இருந்து கொடுக்கப்படும், காலையில் தம்பதிகள் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவர், அதன்பின்னர் மகளுக்கும், மருமகனுக்கும் புதுத் துணிகளை வாங்கி பரிசாக கொடுப்பர்.

அந்த உடைகளை அணிந்தபின்னர், கடவுளுக்கு படையல் இட்டு ஒட்டு மொத்த குடும்பமும் கடவுளை வழிபடுவர், அடுத்து தம்பதிகளுக்கு விருந்துகள் கொடுப்பர். புதுமணத் தம்பதிகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.

இப்பண்டிகையின் பொழுது மணமகனும் மாமனார் வீட்டில் உள்ளவர்களுக்கு புது துணிகள், பட்டாசுகள், பரிசுப் பொருட்கள், பலகாரங்கள் போன்றவற்றினை அளிப்பர்.

From around the web