சபரிமலை தீர்ப்பு மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு தேதி!

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளதால் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை அனுமதிக்க கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு
 

சபரிமலை தீர்ப்பு மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு தேதி!

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளதால் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை அனுமதிக்க கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது.

இந்த தீர்ப்பில் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்று 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த தீர்ப்பை பெரும்பாலான மத அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்த தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மறுசீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் அயோத்தி வழக்கின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் உள்ள பாலி நாரிமன், ஏ எம் கான்வில்கர் , டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய நீதிபதிகள் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளனர். இந்த தீர்ப்பை நாடே மிக ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது

From around the web