வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்

சென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர்களிடமிருந்து ஆகஸ்ட் 22-ம் 1639 ஆண்டு சிறிது நிலத்தினை விலைக்கு வாங்கினார். சென்னை பெரிய மாநகரமாக திகழ்கிறது. நிறைய வேலையில்லா மக்களுக்கு வேலையுடைய நகரமாக திகழ்கிறது. தங்க இடமின்றி ஒரு வேளை உணவிற்கு கூட
 
வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்

சென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர்  சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர்களிடமிருந்து ஆகஸ்ட் 22-ம் 1639 ஆண்டு சிறிது நிலத்தினை விலைக்கு வாங்கினார்.

சென்னை பெரிய மாநகரமாக திகழ்கிறது. நிறைய வேலையில்லா மக்களுக்கு வேலையுடைய நகரமாக திகழ்கிறது. தங்க இடமின்றி ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லா மக்களை கூட அரவணைத்துள்ளது சென்னை மாநகரம்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம் சென்னப்பட்டணம் என்று ஓர் சிறிய கிராமமாகத்தான் முதலில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது வணிக முகாமை ஆந்திராவில் உள்ள நெல்லூர் ஓர் பகுதியில் போட்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களின் ஆணையால் சென்னப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்தனர். மசூலிப்பட்டினத்தின் கெளன்சிலராக இருந்த சர் பிரான்ஸிஸ் டே சென்னையின் கடற் பகுதியில் மேடாக இருந்த பகுதியை கண்டறிந்து அதை விலைக்கு வாங்கினார். ஆங்கிலேயர்கள் செயின்ட் சார்ஜ் கோட்டையை அங்கு கட்டினார்கள்.

இதனை தொடர்ந்து சிறு சிறு குடியிருப்புகள் உருவாக தொடங்கினர் அதனை மதரசப்பட்டிணம் என அழைத்தனர். பின்னர் தெற்கே பல பகுதிகள் உருவாகின அதனை சென்னப்பட்டணம் என்றும், பின்னர் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. 1947 சுதந்திரத்திற்கு பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1969-ல் சென்னை மாநகரம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சென்னை என்று சட்டப்பூர்வமாக 1996-ல் அறிவிப்பு வெளியானது. சென்னை பெரிய நகரமாக இப்போது திகழ்கிறது.

சென்னை இந்தியாவின் முக்கிய தலைநகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. வெற்றிகரமாக 380-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

From around the web