கவனமாக பேசுங்கள்… அமைச்சர்களுக்கு ஸ்டாலின் திடீர் அட்வைஸ்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பொதுவெளியில் அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வருக 7-ஆம் தேதி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து 3-ஆம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த சூழலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது . இதில் புதிய ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மூத்த அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வழியாகி பேசு பொருளாக மாறிவரும் நிலையில் நலத்திட்டம் பற்றி பொதுவெளியில் அமைச்சர்கள் கவனமாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கோலாகலமாக நடைபெற்ற சித்திரைப் பெருவிழா தேரோட்டம்!

அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளாலும் அதனால் வரும் விமர்சனங்களும் தனக்கு மிகவும் வருத்தம் அழிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.