Entertainment
அப்பா நலமாக இருக்கின்றார்: எஸ்பிபி உடல்நிலை குறித்து எஸ்பிபி சரணின் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை நேற்று திடீரென கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் சற்று முன் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது எனது தந்தை எஸ்பி பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர் என்றும், உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நேற்றைவிட இன்று அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்
மேலும் இதிலிருந்து மீள்வதற்கு சில காலங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும், உங்களுடைய பிரார்த்தனையிலும் அவர் நிச்சயம் மீண்டு வருவார் என்றும், எனக்கு இன்று காலை முதல் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அப்பாவின் உடல் நலம் குறித்து கேட்டனர் என்றும், அனைவருக்கும் தனித்தனியாக என்னால் பதில் கூற முடியாத சூழல் இருப்பதால் இந்த வீடியோ வாயிலாக இதனை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அப்பா விரைவில் குணமாக தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள், அனைவருக்கும் நன்றி’ என்று எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார்
