Connect with us

90% மயக்க நிலையிலிருந்து மீண்டுவிட்டார்: எஸ்பிபி குறித்து எஸ்பிபி சரண்

Entertainment

90% மயக்க நிலையிலிருந்து மீண்டுவிட்டார்: எஸ்பிபி குறித்து எஸ்பிபி சரண்

5723d6cb8f1ad497edc9ef9c14ead5ef

கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மயக்க நிலையிலிருந்து 90% மீண்டும் விட்டதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்

எஸ்பிபி சரண் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 90 சதவீதம் மயக்க நிலையில் மீண்டு விட்டதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் தனது தந்தை எஸ்பிபி அவர்கள் விரைவில் ஆரோக்கியமான நபராக மாறுவார் என்றும் அந்த நாள் மிக விரைவில் வரும் என்றும் அந்த நாள் நாம் அனைவருக்கும் இனிமையான நாளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் எஸ்பிபி அவர்கள் குணமாக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய எஸ்பிபி சரண், தனது தந்தையின் சிகிச்சைக்காக இரவு பகலாக பாடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்

எஸ்பிபி அவர்கள் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டு விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top