News
கொரோனா வைரஸால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் மரணம்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா, பொது மக்களை மட்டுமின்றி விஐபிக்களையும் தாக்கி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்தோம்
இந்த நிலையில் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் வீரருமான பிரான்சிஸ்கோ கார்சியா என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
இருபத்தொரு வயதான இவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் இவரது மரணம் கொரோனா வைரசால் ஏற்பட்டதா? அல்லது புற்று நோயால் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னரே அது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
