ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நலன்கள்

கோவிலுக்கு செல்வோர் பொதுவாக கோவிலில் சாமி தரிசனம் முடித்த உடன் அங்குள்ள கடைகளை சுற்றி பார்ப்பர். பெரும்பாலான கடைகளில் டாலர்கள்,அ ந்த கோவில் சம்பந்தமான பிரேம் செய்யப்பட்ட படங்கள், இன்னும் ஆன்மிக ரீதியிலான சில பொருட்கள் அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அதில் ஒன்றுதான் ஸ்படிக மாலை. விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் இல்லை என்றால் அதை அணியலாமா வேண்டாமா என அச்சத்துடன் வாங்காமல் இருப்பவர்களும் அதிகம். ஸ்படிக மாலை அணியலாமா வேண்டாமா அதை அணிவதால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

ஸ்படிக மாலையை அணிவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பொதுவாக குளிர்ச்சியான ஸ்படிகமாலையை மிகவும் குளிர்ச்சியான உடல் உடையவர்கள் அணியக்கூடாது. அது போல் குளிர்பிரதேசத்தில் உள்ளவர்களும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் அவர்களுக்கு காய்ச்சல், சளி என குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சினைகள் வரும். மேலும் அடிக்கடி காய்ச்சல், சளியால் பாதிக்கப்படுவோரும் நன்றாக சோதனை செய்து அணிய வேண்டும். ஒரு முறை ஸ்படிகம் அணிந்து ஓரிரு நாட்களிலேயே உடல் ரீதியாக காய்ச்சல், சளி சம்பந்தமான குளிர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகள் வந்தால் ஸ்படிகம் அணியாமல் இருப்பது நல்லது.

ஸ்படிகம் சிவபெருமானுக்கு உகந்தது. ராமேஸ்வரம் உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் ஸ்படிக லிங்க பூஜை மிக சிறப்பாக நடக்கும். ஸ்படிகம் பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து எடுத்து செதுக்கி அதன் அழுக்குகள் எல்லாம் நீக்கப்பட்டு ஸ்படிக மாலையாக மாறுகிறது.

ஸ்படிக மாலையில் பெரும்பாலும் போலி மாலைகளை விற்கிறார்கள். ஸ்படிகத்தை உரசினால் தீப்பொறி பறக்கும் அதுதான் ஒரிஜினல் மாலை என்று சொல்லப்படுகிறது.கண்டறிந்திருக்கின்றார்கள். ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள், தெய்வ அருள்,  மனதில் அமைதி, சாந்தம்,  நற்சிந்தனை,தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம் கண் முன் நிகழ்த்தும்.

ஆன்மிகத்தை நேசிப்போர் அனைவருக்கும் தெய்வீகம் நிறைந்த ஸ்படிக மாலை நல்லதுதான்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print