கனமழை எதிரொலி: சென்னை புறநகர் ரயில்கள் இன்று இயங்குமா?

சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக போக்குவரத்து கடும் சிக்கலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து ஒரு சில ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதனை அடுத்து இன்றும் கனமழை பெய்து வருவதால் புறநகர் ரயில்கள் இன்று இயங்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்தது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அனைத்து பகுதிகளிலும் தண்டவாளம் சரி செய்யப்பட்டு உள்ளதால் புறநகர் ரயில்கள் இயக்குவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே இன்று சென்னை பகுதியில் உள்ள அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதனை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பயணத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment