பல்லவன் விரைவு ரயில் இன்று முதல் மார்ச் 4 ந் தேதி வரை சென்னை – காரைக்குடி, காரைக்குடி – சென்னை இடையே இருமார்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை – திருமங்கலம் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பல்வேறு விரைவு ரயில்கள் மாற்று வழியில் இயங்கும் என்றும் சில ரயில்களை தற்காலிகமாக நிறுத்தம் செய்து தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதில் பல்லவன் அதிவிரைவு ரயில் 9 நாட்கள் தற்காலிகமாக இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 12605 சென்னை To காரைக்குடி வரும் “பல்லவன் விரைவு ரயில் ” பிப்ரவரியில் 16, 17, 20, 21,23, 24,27, 28 மார்ச் 3 ஆகிய 9 நாட்களில் தற்காலிகமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 12606 காரைக்குடி To சென்னைக்கு பிப்ரவரி-17, 18,21,22,24,25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் தற்காலிமாக இயங்காது என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.